Works of the Flesh Download PDF
மாமிசத்தின் கிரியைகள்
கலாத்தியர் 5:16-21
16. பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
17. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன:
a) விபசாரம், (திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ, தன்னுடைய மனைவி அல்லது கணவன் அல்லாத வேறொருவருடன் மனமுவந்து உடலுறவு கொள்வது)
b) வேசித்தனம், (திருமணமாகாத இருவர் தங்களுக்குள் உடலுறவு வைத்துக் கொள்வது)
c) அசுத்தம், (ஆன்மீக வாழ்வில் தூய்மையும், பரிசுத்தமும் இல்லாமல் இருப்பதை இது குறிக்கின்றது)
d) காமவிகாரம், (இயற்;கைக்கு மாறான ஒழுங்கீனமான காமச்செயல்கள். சுநக: கடவுள் தந்த கட்டளைகள் (ளுநசஎயவெ ழக புழன))
e) விக்கிரகாராதனை, (சிலைகளையோ, உலகப் பொருட்களையோ கடவுள் என்று சொல்லி வழிபடுதல் (தீய ஆவி வழிபாடு))
f) பில்லிசூனியம், (சூனியக்காரர் செய்யும் ஏவுதல் மற்றும் மந்திரச்செயல்: குறிப்பாக, தீயஆவிகள் மூலம் பெற்றுக்கொண்ட மந்திர சக்திகள்)
g) பகைகள், (கடுமையான வெறுப்பு, தீவிர ஒவ்வாமை)
h) விரோதங்கள், (தேவையற்ற பகைமை பாராட்டுதல்)
i) வைராக்கியங்கள், (பொறாமை, போட்டி மனப்பான்மை)
j) கோபங்கள், (அளவுக்கதிகமான கோபம்)
k) சண்டைகள், (அடிப்படை கோட்பாடுகள் பற்றிய கசப்பான கருத்து வேறுபாடு)
l) பிரிவினைகள், (கலகம், குழப்பநிலை)
m) மார்க்கபேதங்கள், (மதக்கொள்கைகளுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு முரண்பாடான கருத்துகளைப் பேசுவது அல்லது நம்புவது)
n) பொறாமைகள், (மற்றவர்கள் வாழ்வில் நன்மையடையும்பொழுது, முன்னேற்றமடையும்;பொழுது, சொந்தமாக பொருட்கள் வாங்கும்பொழுது, அதைப்பார்த்து துக்கமடைவது, மனக்குறைவடைவது)
o) கொலைகள், (சட்டத்திற்கு விரோதமாக, மனித உயிர்களை கொலை செய்வது)
p) வெறிகள், (தீய நெறிகளுக்கு அடிமையாதல்)
q) களியாட்டுகள் (ஒரு கூட்டமாக சேர்ந்து குடிவெறியோடு, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பாலியல் செயல்களில் ஈடுபடுவது முதலானவைகளே.)
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
விளக்கவுரை:
ஒரு மனிதனிடம்; (ஆவி பெறாதவன் அல்லது மறுபடியும் பிறக்காதவனிடத்தில்) கல்லான இருதயம் இருக்கின்றது. ஏனென்றால், கடவுளின் ஆவி அவனிடம் இல்லை. வேறு தீய ஆவி அவன் உடலை இயக்குகின்றது. ஆகவே, மாமிசத்தின் கிரியைகளை விரும்பி செய்கின்றான். மனிதனிடத்தில் உள்ள, இந்த மாமிச உடல் தேவனால் கொடுக்கப்படவில்லை. அது சாத்தானால் (ஆதாம், ஏவாள் பாவம் செய்ததால்) கொடுக்கப்பட்டது. அது எப்பொழுதும், மாமிசத்தின் கிரியைகளான,
1. விபசாரம்
2. வேசித்தனம்
3. அசுத்தம் மற்றும் மேலே கூறியவைகளை விரும்பி செய்யும்.
ஆதாம், ஏவாள் பாவம் செய்வதற்கு முன்னால், அவர்கள் தேவ ஆவிக்குரிய உடலை பெற்றிருந்தார்கள். அது எப்படியிருந்ததென்றால், இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தபின் வைத்திருந்த, ஆவிக்குரிய உடம்பாக இருந்தது.
மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். (யோவான் 20:26)
இதை போன்ற தெய்வீக உடம்பு, நாம் ஆவிக்குள் வாழும் பொழுது நமக்கு கொடுக்கப்படும். இது எப்படி இருக்குமென்றால், பரலோகத்தில் இருக்கின்ற வான தூதர்களை போல் இருக்கும்.
உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;(மத்தேயு 22:30)
மனிதன் மறுபடியும் பிறக்கும்பொழுது (ஆவிக்குள்), கடவுளின் ஆவியை பெற்றுக்கொள்கிறான். இப்பொழுது, சாத்தானால் கொடுக்கப்பட்ட உடம்பிற்கும், கடவுளின் ஆவிக்கும் ஒத்துப்போவதில்லை.
நாமோ ஆவிக்கு விரோதமான உடலை பெற்றிருப்பதால், இறக்கும் வரை நமக்கு போராட்டம் உண்டு.
கடவுள் மனிதனை படைத்தது, திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ தன்னுடைய மனைவி அல்லது கணவன் அல்லாத வேறு ஒருவருடன் மனமுவந்து உடலுறவு கொள்வதற்கோ அல்லது திருமணமாகாத இருவர் தங்களுக்குள் உடலுறவு வைத்துக்கொள்வதற்கோ மற்றும் மேலே கூறிய பாவங்களை செய்வதற்கோ அல்ல.
கலாத்தியர் 5:16-17
16. பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
17. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
Galatians 5:16-21
16. This I say then, Walk in the Spirit, and ye shall not fulfil the lust of the flesh.
17. For the flesh lust against the Spirit, and the Spirit against the flesh: and these are contrary the one to the other: so that ye cannot do the things that ye would.
18. But if ye be led of the Spirit, ye are not under the law.
19. Now the works of the flesh are manifest, which are these;
a) Adultery, (Voluntary sexual intercourse between a married person and a person who is not their spouse)
b) Fornication, (Sexual intercourse between people not married to each other)
c) Uncleanness, (It refers to the absence of spiritual purity and holiness – unholy)
d) Lasciviousness, (Perverted sex. Ref: Word of God — by Servant of God)
e) Idolatry, (Idolatry is the (worship other spirits) of an idol or a physical object as a representation of a god)
f) Witchcraft, (Magical things that are done by witches: the use of magical powers obtained especially from evil spirits)
g) Hatred, (Intense dislike or extreme aversion or hostility)
h) Variance, (Inconsistent)
i) Emulations, (Envious rivalry)
j) Wrath, (Extreme anger)
k) Strife, (Bitter disagreement over fundamental issues)
l) Seditions, (Revolt)
m) Heresies, (Belief or opinion contrary to orthodox religious (especially Christian) doctrine)
n) Envying, (A feeling of discontent regard to another’s advantages, success, possessions)
o) Murders, (Unlawful killing of another human)
p) Drunkenness, (Addiction)
q) Revelling, (A social gathering involving unrestrained indulgence, especially sexual activities)
and such like: of the which I tell you before, as I have also told you in time past, that they which do such things
1. Adultery
2. Fornication
3. Uncleanness etc ., as said above.
For spiritual man’s flesh lusts against the spirit and the spirit against the flesh, and they are contrary the one to the other. So, we have to fight against flesh till our death.
Galatians 5:16-17
17. For the flesh lust against the Spirit, and the Spirit against the flesh: and these are contrary the one to the other: so that ye cannot do the things that ye would.