Home They shall speak with new Tongues

They shall speak with new Tongues

13 Jun 2016

They shall speak with new Tongues Download PDF

அவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள்

யோவான் 1:25-27, 29-34

25. அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
26. யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
27. அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
30. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர் தான்.
31. நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான்.
32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.

விளக்கவுரை:

யோவான் 1:29 சொல்லுகின்றது, கிறிஸ்து உலகத்தின் பாவங்களை மன்னிக்கின்றவர் ஆனால்,
மத்தேயு 12:31-ல், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.

யோவான் 1:32ன் படி, பரிசுத்த ஆவி எல்லாம் வல்ல தேவனிடத்திலிருந்து கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் என்ற பெயரில் கொடுக்கப்பட்டது.

யோவான் 1:33ன் படி, தான் பரலோக தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியை, கிறிஸ்து நமக்கு ஞானஸ்நானம் (மெய்மையான ஞானஸ்நானம்) என்ற பெயரில் கொடுகின்றார். ஏனென்றால் இவர் பரலோக தேவனின் ஏக குமாரன்.

யோவான் நீரினால் ஞானஸ்நானம் கொடுத்தார் ஆனால் இயேசு கிறிஸ்து ஆவியினால் ஞானஸ்நானம் கொடுகின்றார். நீரினால் ஞானஸ்நானம் என்பது ஒரு துவக்கமே, அதை பெறுபவர்கள் நவபாசை பேசுவது இல்லை. ஆனால் ஒருவன் ஆவியினால்; (கிறிஸ்துவில்) ஞானஸ்நானம் பெற்றால் அவன் நிச்சயமாக நவபாசை பேசுவான் (பார்வை: 1 கொரிந்தியர் 12, 13 மற்றும் 14 அதிகாரங்கள்) அவனே கிறிஸ்தவன். கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு நவபாசை பேசாதவன் கிறிஸ்தவன் அல்ல.

முக்கியமாக, இயேசு கிறிஸ்துவை போதிக்கின்றவனிடம் நவபாசை இல்லையென்றால் அவன் போதனையை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள், அவன் கிறிஸ்தவன் அல்ல. ஆகவே அப்படிப்பட்டவர்களுடைய போதனையை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இருப்பினும் தேவாலய பணியில் ஈடுபடுவதை விட்டு விடாதீர்கள். சுருங்கச்சொல்லின்,

• இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களை மன்னிக்கின்றார் ஆனால், பரிசுத்த ஆவிக்கு (பரலோகத்திற்க்கு) எதிரான பாவங்களை மன்னிப்பதில்லை.
• நீரினால் ஞானஸ்நானம் பெறுவது மட்டும் போதாது, ஆவியினால் (கிறிஸ்துவில்) கட்டாயமாக ஞானஸ்நானம் பெறவேண்டும்.
• நவபாசை இல்லாத போதகர்களோடு உங்களுக்கு உறவு தேவையில்லை.

மாற்கு 16:17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

ரோமர் 8:9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

English Version

They shall speak with new Tongues

John 1:25-27, 29-34

25. And they asked him, and said unto him, Why baptizest thou then, if thou be not that Christ, nor Elias, neither that prophet?
26. John answered them, saying, I baptize with water: but there standeth one among you, whom ye know not;
27. He it is, who coming after me is preferred before me, whose shoe's latchet I am not worthy to unloose.
29. The next day John seeth Jesus coming unto him, and saith, Behold the Lamb of God, which taketh away the sin of the world.
30. This is he of whom I said, After me cometh a man which is preferred before me: for he was before me.
31. And I knew him not: but that he should be made manifest to Israel, therefore am I come baptizing with water.
32. And John bare record, saying, I saw the Spirit descending from heaven like a dove, and it abode upon him.
33. And I knew him not: but he that sent me to baptize with water, the same said unto me, Upon whom thou shalt see the Spirit descending, and remaining on him, the same is he which baptized with the Holy Ghost.
34. And I saw, and bare record that this is the Son of God.

Commentary:

The verse John 1:29 said that Christ can remove the sins of the world but Mat 12:31, I say unto you, All manner of sin and blasphemy shall be forgiven unto men: but the blasphemy against the Holy Ghost shall not be forgiven unto men.

The verse John 1:32 said that Holy Spirit came from heaven, the God Elohim and descended over Christ. So Christ was baptized by the Holy Spirit from heaven.

The verse John 1:33 said that Christ baptize us with Holy Spirit what HE received from heaven the God Elohim. Because he is the only SON of GOD.

John the Baptist, baptized with water but Christ baptize us with spirit of God. Those baptized with water by man need not speak in tongue, but person baptized with spirit of God (Christ) certainly speak in tongue. (Ref. 1 Corinthians: 12th, 13th, and14th chapters.)

According to bible, those who are not speaking in tongue, certainly, he is not Christian more particularly be careful about preaching of the preachers who are not having the very minimum gift of God “TONGUE”. Please do not follow his preaching’s but do not fail in attending the church activities.

In shortly,

• Christ forgives the sins of the world, but the blasphemy against the Holy Ghost shall not be forgiven unto men.
• Baptized by water alone is not sufficient. Baptize by Spirit of God should be essential.
• You need not have relationship with preachers who don’t have the gift of God “TONGUE”.

Mark 16:17
And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new tongues;

Romans 8:9
But ye are not in the flesh, but in the Spirit, if so be that the Spirit of God dwell in you. Now if any man have not the Spirit of Christ, he is none of his.

WordPress Lightbox