There is no peace for the wicked Download PDF
பொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை
ஏசாயா 57:15-21
15. காலங்கடந்திருப்பவரும், மேன்மை தங்கிய உன்னதரும், பரிசுத்தர் என்னும் பெயரினருமானவர் கூறுகிறார்: உயர்ந்ததும், பரிசுத்தமுமான இடமே நம் உறைவிடம்: ஆனால் பாவத்திற்காக வருந்தும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரோடும் நாம் குடிகொண்டிருக்கிறோம்: தாழ்மையுள்ளோரின் இதயத்தை ஊக்குவிக்கவும், மனஸ்தாபமுள்ளோரின் இதயத்தைத் திடப்படுத்தவுமே அவர்களோடு குடிகொண்டிருக்கிறோம்.
16. ஏனெனில் என்றென்றைக்கும் நாம் வழக்காட மாட்டோம், கடைசி வரையில் நாம் கோபமாய் இருக்க மாட்டோம்: இருப்போமாகில், ஆவியும் நாம் படைத்த ஆன்மாக்களும் நம் முன்னிலையில் மறைந்து போகுமே!
17. பேராசையாகிய அக்கிரமத்திற்காக நம் மக்கள் மேல் நாம் கோபங் கொண்டோம், அடித்து நொறுக்கினோம்: அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டு, அவர்கள் மேல் எரிச்சல் கொண்டிருந்தோம்: ஆனால் அவர்கள் நம்மை விட்டு விலகி மனம்போன போக்கிலேயே போனார்கள்.
18. அவர்களின் நடத்தையைக் கண்டோம், ஆயினும் அவர்களைக் குணப்படுத்துவோம்: திரும்பக் கூட்டி வந்து அவர்களுக்கும், அவர்களுக்காக அழுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்போம்.
19. அவர்கள் உதடுகளிலிருந்து புகழ் மொழிகள் உதிரச் செய்வோம்: சமாதானம்! தொலைவிலிருப்பவனுக்கும் அருகிலிருப்பவனுக்கும் சமாதானம்! அவர்களைக் குணமாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
20. தீயவர்களோ பொங்கியெழும் கடல் போல் இருக்கிறார்கள்: அந்தக் கடல் அடங்கியிருக்காது, அதன் அலைகள் கரையில் அடித்து மோதிச் சேற்று நுரையைக் கக்குகிறது.
21. பொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை, என்கிறார் என் கடவுள்.
விளக்கவுரை:
உலக காரியங்களில் பேராசை, தீயவனாக இருப்பது, அடுத்தவருடைய பொருள், மனைவி போன்றவற்றை அபகரித்து கொள்ளுதல், ஆணவம் மற்றும் மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்க விருப்பமில்லாமை போன்றவைகள் கடவுளுக்கு பிடிக்காது. மேலும், பொல்லாதவனுக்கு சமாதானம் இல்லவே இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 57:15-21
15. For thus says the high and lofty one who inhabits eternity, whose name is Holy:I dwell in the high and holy place, and also with those who are contrite and humble in spirit,to revive the spirit of the humble, and to revive the heart of the contrite.
16. For I will not continually accuse, nor will I always be angry;for then the spirits would grow faint before me, even the souls that I have made.
17 Because of their wicked covetousness I was angry; I struck them, I hid and was angry;but they kept turning back to their own ways.
18. I have seen their ways, but I will heal them; I will lead them and repay them with comfort, creating for their mourners the fruit of the lips.
19. Peace, peace, to the far and the near, says the LORD; and I will heal them.
20. But the wicked are like the tossing sea that cannot keep still; its waters toss up mire and mud.
21. There is no peace, says my God, for the wicked.
Commentary:
Greedy over worldly affairs, wickedness, covetousness, pride and the unrepentant are not acceptable to GOD. There is no peace, says my God, for the wicked.