The Seven Spirits of God Download PDF
கடவுளின் ஏழு ஆவிகள்
1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
விளக்கவுரை:
இயேசுகிறிஸ்து, ஈசா வேர்களிலிருந்து வந்த, தாவீதின் வம்சத்திலிலுந்து வந்தவர். ஈசா வேர்களிலிருந்து, ஒரு கிளை எழும்பி செழிக்கும்: அந்த கிளைதான் இயேசுகிறிஸ்து. அவரிடம்,
2. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்; (மத்தேயு 1:5, 6)……
இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். (மத்தேயு 1:17)
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். (மத்தேயு 1:18, 16, 19-21)
அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். (லூக்கா 1:34,35)
தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. (மத்தேயு 1:22)
கர்த்தருடைய ஏழு ஆவிகளும், அவற்றின் செயப்பாடுகளுமாவன,
1. ஞானத்தை அருளும் ஆவி
2. உணர்வை அருளும் ஆவி
3. ஆலோசனை அருளும் ஆவி
4. பெலனை அருளும் ஆவி
5. அறிவை அருளும் ஆவி
6. கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவி
7. கர்த்தருடைய ஆவியானவர்
1. ஞானத்தை அருளும் ஆவி
ஞானத்தை அருளும் ஆவியானவர் (கடவுளுடைய இரகசியங்களை அறியும் ஆவி), கடவுளுடைய மறைக்கப்பட்ட உண்மைகளை, ஆவியில் உள்ள மனிதர்களுக்கு, அவர்கள் ஆவியில் உள்ள ஆழத்தைப் பொறுத்து, கடவுளுடைய மறைக்கப்பட்ட மறைபொருட்களைக் கூறுவார். ஒருவன் இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை தெரிந்து கொள்வானேயாகில், அது அவன் பரலோகம் செல்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், சாதாரண அல்லது தேவனுடைய ஆவி இல்லாதவர்களுக்கு, இவைகள், அவர்கள் இறக்கும்வரை மறைபொருளாகவே இருக்கின்றது.
ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப் பேசினாலும்,அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். (கொரிந்தியர் 14:2)
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். (நீதிமொழிகள் 1:20-23)
ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை. (பிரசங்கி 7:12)
உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது. (தானியேல் 2:30)
உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், (தானியேல்) அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.
உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன். (தானியேல் 5:11, 14)
ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். (அப்போஸ்தலர் 6:3)
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. (யாக்கோபு 3:17)
அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 5:12)
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. (வெளிப்படுத்தின விசேஷம் 13:18)
ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். (வெளிப்படுத்தின விசேஷம் 17:9)
விளக்கவுரை:
இப்படிப்பட்ட மறை உண்மைகளை அறிவதற்க்கு ஞானம் தேவை. இது எல்லாம் வல்ல இறைவனிடத்திலிருந்து வருகின்றது. ஒவ்வொரு மனிதனும் இதை அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். (யாக்கோபு 1:5)
குறிப்பு: அடுத்தப் பதிவு,
1. உணர்வை அருளும் ஆவி (புரிந்து கொள்ளுதல், மனதினால் உணரும் திறன், புத்தி)
1. And there shall come forth a rod out of the stem of Jesse, and a Branch shall grow out of his roots:
Commentary:
Jesus is a descendant of David.
Branch shall grow out of his roots (Jesse): that branch is the Christ and Jesus had
2. the spirit of the LORD shall rest upon him, the spirit of wisdom and understanding, the spirit of counsel and might, the spirit of knowledge and of the fear of the LORD;
And Salmon begat Booz of Rachab; and Booz begat Obed of Ruth; and Obed begat Jesse;
And Jesse begat David the king; and David the king begat Solomon of her that had been the wife of Urias; (Matthew 1:5,6,)…….
So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations. (Matthew 1:17)
Now the birth of Jesus Christ was on this wise: When as his mother Mary was espoused to Joseph, before they came together, she was found with child of the Holy Ghost.
And Jacob begat Joseph the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.
Then Joseph her husband, being a just man, and not willing to make her a publick example, was minded to put her away privily.
But while he thought on these things, behold, the angel of the Lord appeared unto him in a dream, saying, Joseph, thou son of David, fear not to take unto thee Mary thy wife: for that which is conceived in her is of the Holy Ghost.
And she shall bring forth a son, and thou shalt call his name JESUS: for he shall save his people from their sins. (Matthew 1:18,16,19-21)
Then said Mary unto the angel, how shall this be, seeing I know not a man?
And the angel answered and said unto her, The Holy Ghost shall come upon thee, and the power of the Highest shall overshadow thee: therefore also that holy thing which shall be born of thee shall be called the Son of God. (Luke 1:34,35)
Now all this was done, that it might be fulfilled which was spoken of the Lord by the prophet, saying. (Matthew 1:22)
The seven Spirits of God and their acts,
1. Spirit of WISDOM
2. Spirit of UNDERSTANDING
3. Spirit of COUNSEL
4. Spirit of MIGHT
5. Spirit of KNOWLEDGE
6. Spirit of FEAR of the LORD
7. Spirit of the LORD
1. Spirit of WISDOM
Commentary:
The Spirit of Wisdom, reveal the hidden mysteries of God to those who are worthy of the mystery and thereby attain the Kingdom of God. Those impious and sinful souls, who don’t have the Spirit of God are not worthy of God’s mystery, and make themselves for ever strangers to the mystery of The kingdom of God.
For he that speaketh in an unknown tongue speaketh not unto men, but unto God: for no man understandeth him; howbeit in the spirit he speaketh mysteries. (1 Corinthians 14:2)
Wisdom crieth without; she uttereth her voice in the streets:
She crieth in the chief place of concourse, in the openings of the gates: in the city she uttereth her words, saying,
How long, ye simple ones, will ye love simplicity? And the scorners delight in their scorning, and fools hate knowledge?
Turn you at my reproof: behold, I will pour out my spirit unto you, I will make known my words unto you. (Proverbs 1:20-23)
For wisdom is a defence, and money is a defence: but the excellency of knowledge is, that wisdom giveth life to them that have it.
(Ecclesiastes 7:12)
But as for me, this secret is not revealed to me for any wisdom that I have more than any living, but for their sakes that shall make known the interpretation to the king, and that thou mightest know the thoughts of thy heart. (Daniel 2:30)
There is a man in thy kingdom,(Daniel) in whom is the spirit of the holy gods; and in the days of thy father light and understanding and wisdom, like the wisdom of the gods, was found in him; whom the king Nebuchadnezzar thy father, the king, I say, thy father, made master of the magicians, astrologers, Chaldeans, and soothsayers;
I have even heard of thee, that the spirit of the gods is in thee, and that light and understanding and excellent wisdom is found in thee.
(Daniel 5:11,14)
Wherefore, brethren, look ye out among you seven men of honest report, full of the Holy Ghost and wisdom, whom we may appoint over this business. (Acts 6:3)
But the wisdom that is from above is first pure, then peaceable, gentle, and easy to be intreated, full of mercy and good fruits, without partiality, and without hypocrisy. (James 3:17)
Saying with a loud voice, worthy is the Lamb that was slain to receive power, and riches, and wisdom, and strength, and honour, and glory, and blessing. (Revelation 5:12)
Here is wisdom. Let him that hath understanding count the number of the beast: for it is the number of a man; and his number is Six hundred threescore and six. (Revelation 13:18)
And here is the mind which hath wisdom. The seven heads are seven mountains, on which the woman sitteth. (Revelation 17:9)
Commentary:
You need wisdom to comprehend the mysteries (Hidden Truth) of God. All wisdom comes from “God, the Most High”. Pray to God and ask for the Spirit of WISDOM.
If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him. (James 1:5)
Note: Next Topic is,
2. Spirit of Understanding (comprehension, recognize in mind)