Psalms 3, 4 Download PDF
சங்கீதம் 3, 4
1. கர்த்தாவே, என் சத்துருக்கள் (விழுந்து போன சம்மனசுக்கள்) எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
2. தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என், (நம்முடைய உடம்பு பூமிக்குரியது, ஆனால் ஆத்துமா பரதீஸ்க்கோ (paradise) அல்லது நரகத்திற்க்கோ போகக்கூடியது) ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
3. ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
4. நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்.
5. நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
6. எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
7. கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
8. இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.
சங்கீதம் 4
1. என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
2. மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள்.
3. பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
4. நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.
5. நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
6. எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
7. அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
8. சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
விளக்கவுரை:
இங்கே (சங்கீதம் 3:1-8) இல், கடவுளைத் தேடுகின்ற மக்களுக்கு எதிராகப் போராடும், கோடிக்கணக்கான சாத்தான்கள் கொடுக்கும் துன்பங்களைப் பற்றிப் பேசப்படுகின்றன.
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும், சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். (வெளிப்படுத்தின விஷேசம் 12:9)
1. மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:
2. தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
3. அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
4. அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
5. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
6. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. (ஆதியாகமம் 6:1-6)
இப்படிப்பட்ட சாத்தான்களை, ஆண்டவர் நியாயம் தீர்ப்பார் என வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால், (ஏசாயா 24:21, 22)* இந்த சாத்தான்கள், கடவுளைப் பழிவாங்கும் பொருட்டாக, கடவுளால் படைக்கப்பட்ட இம்மக்களை, பாவ வாழ்கையில் தள்ளி, மனிதர்கள் யாருமே பரலோகம் அடையவிடாமலும், மிக முக்கியமாக, கடவுளைத் தேடும் மனிதர்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன.
21. அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும்,பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.
22. அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள். (ஏசாயா 24:21, 22)
மேலும், கடவுளிடம் இச்சாத்தான்கள் கடவுளை தேடும் மனிதர்களுக்கு எதிராக குறை கூறிக்கொண்டே இருக்கின்றன. எப்படியென்றால், அவன் செய்த பாவங்களைக் கடவுளிடம் எடுத்துச் சொல்லி, அவன் ஆத்துமா மீட்கப்படக்கூடாது என வாதிடுவான். (வெளிப்படுத்தின விஷேசம் 12:10)**
10. …..இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். (வெளிப்படுத்தின விஷேசம் 12:10)
ஆகையால், நீங்கள் செய்த பாவத்திற்க்காக உண்மையிலேயே மனவருத்தப்பட்டு, கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்புக் கேட்டு, அதை விட்டு விட்டால், அவன் குறைகூற முடியாது. ஆனால், கடவுளைத் தேடாத கிறிஸ்தவர்களைச் சாத்தான் ஒன்றும் செய்வதில்லை. ஏனெனில், அவர்கள் ஆத்துமா இரட்சிக்கப்படுவதில்லை.
கடவுளைத் தேடும் மக்களுக்கோ, சொல்லொண்ணா துன்பத்தைக்கொடுப்பான். ஆகவே, சில கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை வணங்கினால் துன்பம் வருகின்றது என்று சொல்லி, ஜெபம் செய்வதையே விட்டுவிடுகின்றார்கள்!
துவக்கத்தில் சில துன்பங்கள் வந்தாலும், நிலையாக நீதியின் பாதையில் வந்துவிட்டால், அவர்கள் துன்பமெல்லாம் சந்தோஷமாக மாறும். மேலும், கடவுளுடைய மக்கள் தேவனை நோக்கி கூப்பிட்டால், உடனே கடவுள் பரலோகத்திலிருந்து செவி கொடுப்பார். அவர்கள் பூமியில் செய்வதெல்லாம் வாய்க்கும்.
Psalms 3
2. Many there be which say of my soul, (Our physical body is earthly and it will go to earth and our soul is made up of spirit and it may either go to paradise or to hell.) there is no help for him in God.
3. But thou, O Lord, art a shield for me; my glory, and the lifter up of mine head.
4. I cried unto the Lord with my voice, and he heard me out of his holy hill.
5. I laid me down and slept; I awaked; for the Lord sustained me.
6. I will not be afraid of ten thousands of people, that have set themselves against me round about.
7. Arise, O Lord; save me, O my God: for thou hast smitten all mine enemies upon the cheek bone; thou hast broken the teeth of the ungodly.
8. Salvation belongeth unto the Lord: thy blessing is upon thy people. (Psalms 3:1-8)
Psalms 4
1. Hear me when I call, O God of my righteousness: thou hast enlarged me when I was in distress; have mercy upon me, and hear my prayer.
2. O ye sons of men, how long will ye turn my glory into shame? How long will ye love vanity, and seek after leasing?
3. But know that the Lord hath set apart him that is godly for himself: the Lord will hear when I call unto him.
4. Stand in awe, and sin not: commune with your own heart upon your bed, and be still.
5. Offer the sacrifices of righteousness, and put your trust in the Lord.
6. There be many that say, who will shew us any good? Lord, lift thou up the light of thy countenance upon us.
7. Thou hast put gladness in my heart, more than in the time that their corn and their wine increased.
8. I will both lay me down in peace, and sleep: for thou, Lord, only makest me dwell in safety. (Psalms 4:1-8)
Commentary:
Psalm 3:1-8 explains the problem given by the millions of satanic forces to human beings.
And the great dragon was cast out, that old serpent, called the Devil, and Satan, which deceiveth the whole world: he was cast out into the earth, and his angels were cast out with him. (Revelation 12:9)
1. And it came to pass, when men began to multiply on the face of the earth, and daughters were born unto them,
2. That the sons of God saw the daughters of men that they were fair; and they took them wives of all which they chose.
3. And the Lord said, My Spirit shall not always strive with man, for that he also is flesh: yet his days shall be an hundred and twenty years.
4. There were giants in the earth in those days; and also after that, when the sons of God came in unto the daughters of men, and they bare children to them, the same became mighty men which were of old, men of renown.
5. And God saw that the wickedness of man was great in the earth, and that every imagination of the thoughts of his heart was only evil continually.
6. And it repented the Lord that he had made man on the earth, and it grieved him at his heart. (Genesis 6:1-6)
In Isaiah 24:21, 22* God informed that the fallen angels will be judged for their misbeviour. So in order to revenge god, satanic forces started spoiling the souls of human beings who were created by God, by tempting them to commit sins and go astray.
21. And it shall come to pass in that day, that the Lord shall punish the host of the high ones that are on high, and the kings of the earth upon the earth.
22. And they shall be gathered together, as prisoners are gathered in the pit, and shall be shut up in the prison, and after many days shall they be visited. (Isaiah 24:21, 22)
And also satanic forces always accusing against Godly people that they committed sin and so you (God) should not give salvation to them.(Revelation 12:10)**
10. …..for the accuser of our brethren is cast down, which accused them before our God day and night. (Revelation 12:10)
So if you really repent for the sins and leave it, he could not accuse you. Satanic forces will not trouble ordinary christians those who are not hot in God because they are not eligible for salvation but at the same time he will give maximum trouble to true christians. In this process some weak christians stop prayer assuming that they are being troubled if they pray to God!
It is true that in the begining christians are being troubled but if they live in Godly ways with ardent prayer and penance, satanic forces will leave them and Blessings started comming from God in several folds for the difficulties they have under gone because of satanic forces.