Jesus said, I am the way, the truth, and the life Download PDF
இயேசு கிறிஸ்து ஒருவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்
யோவான் 14:6, 16, 17, 26, 18, 21, 30
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
18. நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.
21. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
30. இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
விளக்கவுரை:
மூவொரு தேவன் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் தேவை. முதலில் மிக முக்கியமானவர் கிறிஸ்து. அவரே பரலோக வாசல். அவரில்லாமல் நீங்கள் உள்ளே நுழைய முடியாது.
இது மட்டும் போதுமானது அல்ல. கிறிஸ்து சொன்னது போல (யோவான் 14:16), நான் பிதாவை வேண்டிக் கொள்வேன், அப்பொழுது பரிசுத்த ஆவியை உங்களுக்குத் தந்தருள்வார். இந்த பரிசுத்த ஆவியானவர் உங்களோடு வாசம்பண்ணி எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார்.
பரிசுத்த ஆவியானவர் நமக்கும், பரலோக தந்தைக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் உங்களோடு வாழ்வார். அதை நீங்கள் எப்படி அறிந்து கொள்ளலாம் என்றால், உங்களுக்கு நவபாசை எனும் வரம் (1 கொரி 12:10 – முத்திரை) இருந்தால் பரிசுத்த ஆவியானவர் உங்களோடு வாழ்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.
மற்றும் இயேசுகிறிஸ்து சொன்னது போல (யோவான் 14:6), ஒருவரும் இயேசு இல்லாமல் பிதாவிடம் செல்லமுடியாது.
ஆகவே, இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவிக்கும், பிதாவுக்கும் பாலமாய் இருக்கிறார். பரிசுத்த ஆவி மனிதனையும் பிதாவையும் இணைக்கின்ற பாலமாய் இருக்கிறார். இருப்பினும் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள்.
இந்த மூவொரு தேவனை, நீங்கள் வேத சட்டத்திற்கு உட்பட்டு வணங்கும் போது, இந்த உலகத்தின் அதிபதியால் உங்களை ஒன்றும் செய்யமுடியாது. சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வீர்கள். விதி* வேலை செய்யாது.
ஆனால், ஏனோ தானோ என்று வேத சட்டப்படி நடக்காமல் மூவொரு தேவனை வணங்கினால், கடவுளுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியாது. விதி* வேலை செய்யும்.
ஆகவே, இயேசுகிறிஸ்துவை முதன்மையாகத் தேடும்பொழுது பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்வார். பின்பு தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரும் நம்மில் குடிகொள்வர். அப்பொழுது நாம் மீட்பைப் பெருவோம்.
Jesus said, I am the way, the truth, and the life
John 14:6,16,17,26,18,21,30
6. Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
16. And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever;
17. Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he dwelleth with you, and shall be in you.
26. But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you.
18. I will not leave you comfortless: I will come to you.
21. He that hath my commandments, and keepeth them, he it is that loveth me: and he that loveth me shall be loved of my Father, and I will love him, and will manifest myself to him.
30. Hereafter I will not talk much with you: for the prince of this world cometh, and hath nothing in me.
Commentary:
The Trinity is important for each and every soul. For every soul, the most important one among the trinity is Christ. He is the gate to heaven, without Him, you cannot enter.
That alone may not be sufficient, as He said (John 14:16), And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you forever;
Holy Spirit is the interface between our Father (in heaven) and us. Since Holy Spirit lives with you, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I (Jesus) have said unto you. (John 14:26)
You can easily identify whether you have Holy Spirit or not. If you have the gift of Holy Spirit (tongue 1 Cor 12:10 i.e. seal of God) then you can say that Holy Spirit is living with you.
As said by Christ (John 14:6) nobody can go to Father without Christ.
So Christ is the interface (bridge) between Holy Spirit and Father, and Holy Spirit is the interface (bridge) between human beings and Father, and they live together.
If you worship trinity by following the commandments, the prince of this world cannot do anything. You will receive all the blessings of God. Fate* will not work on you.
If you worship trinity without following the commandments of God, the prince of this world will disturb you. You cannot receive the blessings of God and fate* will work on you.
So we need Christ first, then Holy Spirit will come, then Father and trinity will be with us. So you will get salvation.
*FATE – Being ruled by the stars and spirits, i.e. astrology / horoscope etc.