Home Born again Christian

Born again Christian

11 Jun 2016

Born again Christian Download PDF

மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்

யோவான் 3:3-8

3. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
4. அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான்.
5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
6. மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
7. நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.
8. காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.

எசேக்கியேல் 36:24-31

24. நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகலதேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.
25. அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
26. உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
28. உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து,
29. உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப்பெருகப்பண்ணி,
30. நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.
31. அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.

விளக்கவுரை:

என்னுடைய ஊழியத்தில் சில நூறு விசுவாசிகள், கடவுளுடைய நவபாசை மற்றும் சில அருட்கொடைகளை பெற்று இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களுடைய கல்லான இருதயத்தை எடுத்து விட்டு சதையான இருதயத்தை பெற்றுக்கொண்டது தான். கல்லான இருதயம் என்றால், மிருகத்தனமான வாழ்க்கை.

மாற்கு 7:21-22

எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்.

நீங்கள் கல்லான இருதயத்தை எடுத்து விட்டால், கடவுள் சுத்தமான நீரை உங்கள் மேல் தெளித்து, உங்களை எல்லா அசுத்தங்களிலிருந்தும் நீக்கி, உங்களுக்கு புதிய சதையான இருதயத்தை கொடுப்பார். (மனித வாழ்க்கைக்கு அழைப்பார்)

கல்லான இருதயத்தை அகற்றி, நல்ல மனித வாழ்க்கையை மேற்கொண்டவர்களை, கடவுள் பல வழிகளில் ஆசீர்வாதங்களால் நிரப்பியுள்ளார். இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள், கடவுளால் வந்தது என்று பலரால் உணர முடிகிறது. ஆனால், ஒரு சிலர், பேராசையினாலும், உலக காரியங்களைப் பற்றிய அதிக கவலைகளினாலும் அதை உணர முடியவில்லை. இத்தகையவர்களுக்கு, மீட்பைப்பற்றிய உண்மையான அர்த்தமும், அதன் முக்கியத்துவமும் தெரிவதில்லை.

மீட்பின் மூலமாக, கடவுளுடைய ராஜ்ஜியத்தை பெற்றுக்கொள்ளலாம். மீட்பை பெறுவதற்க்கு, பரிசுத்த ஆவியின் முத்திரையாக, குறைந்த பட்சம் “நவபாசை” என்ற வரம் முக்கியமாக தேவைப்படுகின்றது. என்னுடைய ஊழியத்தில், கல்லான இருதயத்தை எடுத்து விட்டு, நவபாசை வாங்கிய ஒரு சிலர், திரும்பவும் மனித வாழ்க்கையை (சதையான இருதயத்தை) உதறி விட்டு, மிருக வாழ்க்கைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். தாங்கள் சிரமப்பட்டு பெற்ற ஆத்துமாக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். ஒரு சிலர், கடவுளுடைய கட்டளைகளையே மாற்றுகிறார்கள். விசுவாசிகளைப்பற்றி பலரிடம் புறணி; பேசி, தங்களுடைய ஆத்துமத்தை கெடுத்துக்கொண்டிருப்பதை பார்த்து நான் மனம் வருந்துகிறேன். அவர்கள் மனம் வருந்தி, திரும்பவும் மிருக வாழ்க்கையை விட்டு, நல்ல மனித வாழ்விற்;கு வந்தால், கடவுள் கட்டாயமாக தண்டிக்கமாட்டார் என நினைக்கின்றேன்.

பொதுவாக விசுவாசிகளிடம், “பழக பழக பாலும் புளிக்கும்” என்ற சொல்லுக்கிணங்க, விசுவாச நல் வாழ்க்கை குறைந்து கொண்டே போவதை ஒரு சிலரிடம் காண்கின்றேன். நவபாசை பெற்ற சிலர், நவபாசையை இழந்து விட்டதையும் பார்க்கின்றேன். தொடர்ந்து எதிர் நீச்சலில் “இடைவிடாத ஜெபம், வேதவாசிப்பு, பாவமன்னிப்பு” இருந்தால் மட்டுமே, கிறிஸ்துவுக்குள் தொடர்ந்து வாழ முடியும்.

English Version

Born again Christian

John 3:3-8

3. Jesus answered and said unto him, Verily, verily, I say unto thee, Except a man be born again, he cannot see the kingdom of God.
4. Nicodemus saith unto him, How can a man be born when he is old? can he enter the second time into his mother's womb, and be born?
5. Jesus answered, Verily, verily, I say unto thee, Except a man be born of water and of the Spirit, he cannot enter into the kingdom of God.
6. That which is born of the flesh is flesh; and that which is born of the Spirit is spirit.
7. Marvel not that I said unto thee, Ye must be born again.
8. The wind bloweth where it listeth, and thou hearest the sound thereof, but canst not tell whence it cometh, and whither it goeth: so is every one that is born of the Spirit.

Ezekiel 36:24-31

24. For I will take you from among the heathen, and gather you out of all countries, and will bring you into your own land.
25. Then will I sprinkle clean water upon you, and ye shall be clean: from all your filthiness, and from all your idols, will I cleanse you.
26. A new heart also will I give you, and a new spirit will I put within you: and I will take away the stony heart out of your flesh, and I will give you an heart of flesh.
27. And I will put my spirit within you, and cause you to walk in my statutes, and ye shall keep my judgments, and do them.
28. And ye shall dwell in the land that I gave to your fathers; and ye shall be my people, and I will be your God.
29. I will also save you from all your uncleannesses: and I will call for the corn, and will increase it, and lay no famine upon you.
30. And I will multiply the fruit of the tree, and the increase of the field, that ye shall receive no more reproach of famine among the heathen.
31. Then shall ye remember your own evil ways, and your doings that were not good, and shall lothe yourselves in your own sight for your iniquities and for your abominations.

Commentary:

In my Ministry, few hundreds of people received the gift of TONGUE and other gifts of the Holy Spirit, because they have removed their stony heart. Stony heart means beastly life.

Mark 7:21-22

For from within, out of the heart of men, proceed evil thoughts, adulteries, fornications, murders, Thefts, covetousness, wickedness, deceit, lasciviousness, an evil eye, blasphemy, pride, foolishness:

If you remove the stony heart, God will sprinkle clean water upon you, and you shall be clean; from all your filthiness and God will give you a new fleshy heart and put a new spirit within you.

People, who got rid of their stony heart, were blessed by God in many ways.

Most people understood how God blesses in this way. However a few could not understand because of their foolishness and greed over material benefits of the world. Such people do not know true meaning and value of salvation.

By Salvation, we can achieve the Kingdom of God. In order to get salvation, we must have the seal of Holy Spirit. To identify the seal of the Holy Spirit, at-least 'Gift of tongues' is very importantly required for one.

In my ministry people have received 'Gift of Tongues' after removing their stony heart. After sometime, a few of the same people have given up human behavior (fleshy heart) and started to live like beasts. They are cheating the same souls (believers), for whom they had once toiled and worked hard to deliver.

Some of our members are changing the basic commandments of God. They are gossiping and spreading lies of their own believers and thus causing harm, not only to themselves but also to their own believers. Such misbehaviour brings much concern and sorrow to me.

If such people change their behaviour with deep regret, let go of beastly (animal) behaviour and start living as good human beings, surely I hope God does not punish them. I have also observed among some believers, that as time passes by, they have slowly begun to lose their good human behaviour.

I have also observed some who received the 'Gift of Tongues' have lost the Gift along the way because of ungodly life. Living in Christ is a continuous effort, like swimming against the current in a river. Continuous efforts of non-stop prayer, reading the scriptures and asking forgiveness of sins will enable one to Live in Christ.

WordPress Lightbox