Home Psalms and their Authors

Psalms and their Authors

24 Feb 2017

Psalms and their Authors Download PDF

கேள்வி: வேதாகமத்திலுள்ள சங்கீத புஸ்தகத்தின் ஆசிரியர்கள் யாவர் ?

பதில்

பரவலாக உள்ள கருத்துக்கு மாறாக, சங்கீதங்கள் அனைத்தையும் தாவீது எழுதவில்லை. சங்கீதங்கள் தவிர, வேதத்திலுள்ள மற்ற அனைத்து ஆகமங்கள் ஒவ்வொன்றையும் எழுதிய ஆசியர்களையும்விட, சங்கீதங்கள் அதிகமான ஆசிரியர்களால் எழுதப்பட்டது என்பதே உண்மை.

சங்கீதப் புத்தக சங்கீதங்களும், அதை எழுதிய ஆசிரியர்களுடைய விவரங்களுமாவன:

தாவீது >(David) –- 75 சங்கீதங்கள்

73 சங்கீதங்கள், தாவீதால் எழுதப்பட்டதாக சங்கீத புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அவைகளாவன – சங்கீதங்கள் — 3-9; 11-41; 51-65; 68-70; 86; 101; 103; 108-110; 122; 124; 131; 133; 138-145

2-ம் சங்கீதம், தாவீதால் எழுதப்பட்டதை அப். பணி 4:25-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

95-வது சங்கீதம், தாவீதால் எழுதப்பட்டதாக – எபிரெயர் 4:7 கூறுகிறது.

ஆசாப் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் (Asaph & family) – 12 சங்கீதங்கள்

சங்கீதங்கள் — 50; 73-83;

ஹோராவின் மகன்கள்(The sons of Korah) –11 சங்கீதங்கள்

சங்கீதங்கள்; — 42; 44-49; 84-85; 87-88;

ஹோராவின் மகன்கள் மற்றும் ஹுமன் (Heman – 1 psalm, with the sons of Korah) – 1 சங்கீதம்

சங்கீதம் — 88;

சாலமன்(Solomon) – 2 சங்கீதங்கள்

சங்கீதங்கள் — 72 மற்றும் 127;

மோயீசன்(Moses) 1 சங்கீதம்

சங்கீதம் — 90

எஸ்ராகியானாகிய ஏத்தான்(Ethan the Ezrahite) 1 சங்கீதம்

சங்கீதம் — 89

மீதமுள்ள 47 சங்கீதங்கள் பெயர் அறியப்படாத மற்ற ஆசிரியர்களால் எழுதப்பட்டவைகள்.

தாவீதினால் எழுதப்பட்டது என்று சொல்லப்படும் சங்கீதங்களும், தாவீதினிடமிருந்து நேரிடையாக எழுதப்பட்டதாகவோ அல்லது தாவீதோடு கூடயிருந்தவர்களால் எழுதப்பட்டதாகவோ இருக்கலாம் என வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.  குறைந்தது, பெயர் அறியப்பட்ட எட்டு சங்கீத ஆசிரியர்களாலும், பெயர் அறிப்படாத மற்றும் பல ஆசிரியர்களாலும் சங்கீதங்கள் எழுதப்பட்டிருக்கலாம்.

மோயீசன் பாலைவனத்தில் வாழ்ந்த காலம் (கி.மு. 1440-1400) முதல் எஸ்ரா (கி.பி. நான்காம் நூற்றாண்டு) காலம் வரை ஏறத்தாழ 1,000 ஆண்டு காலமாக சங்கீதங்கள் எழுதப்பட்டது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல்.  அதிகமான சங்கீதங்கள், தாவீது மற்றும் சாலமோன் வாழ்ந்த காலங்களில் எழுதப்பட்டவைகள்.

பழங்காலச் சங்கீதங்களுக்குப் பிற்காலங்களில் தலைப்புகள் கொடுக்கப்பட்டதாகவும், அவைகளை அதிகாரப் பூர்வமானவைகளாகக் கருதக்கூடாது என்றும் சிலர் வாதிட்டனர்.  இவ்வாறு, பண்டையக்காலச் சங்கீதங்களின் தலைப்புகள் அதிகளவில் சர்ச்சைகளுக்குள்ளாகின.  இது இப்படியிருக்க, இருபதாம் நூற்றாண்டில் சாக்கடல்சுருளேடுகள்(Dead Sea Scroll) கண்டறியப்பட்டபின், முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீதங்களின் நகல்கள் அதை எழுதிய பாரம்பரிய ஆசிரியர்களின் பெயர்களோடு கிடைக்கப்பெற்றது.  வழிவழியாகக் கூறப்பட்ட சங்கீத ஆசிரியர்களின் பெயர்கள் உண்மை என்பதற்க்கு இக்கண்டுபிடிப்பு ஆதாரமாக உள்ளது.

யூதர்களும், கிறிஸ்தவர்களும், இன்றளவும் சங்கீதங்களை விரும்புகிறார்கள்.  மற்றும் பல நவீனகால பாடல்களும் இந்தச் சங்கீதங்களை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு, பல்வேறு சங்கீதக்காரர்களால் எழுதப்பட்ட இத்தகையச் சங்கீதங்கள், தொடர்ந்து மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றுவதோடு, கடவுளை ஆராதிப்பதற்க்கு ஊக்குவிப்பதாகவும் உள்ளது.

Reference URL : https://www.gotquestions.org/Psalms-authors.html

 

English Version

 

Question: “Who are the authors of the book of Psalms?”

Answer: In contrast to popular thinking, David did not write all of the psalms in the book of Psalms. In fact, Psalms includes more authors than any other book of the Bible. The following authors and the psalms attributed to them are listed below:David (75 total psalms; 73 noted in Psalms; Psalm 2 is attributed to David in Acts 4:25; and Psalm 95 is attributed to David in Hebrews 4:7): 3—9; 11—41; 51—65; 68—70; 86; 101; 103; 108—110; 122; 124; 131; 133; 138—145Asaph (and family) (12 psalms): 50; 73—83

The sons of Korah (11 psalms): 42; 44—49; 84—85; 87

Heman (1 psalm, with the sons of Korah): 88

Solomon (2 psalms): 72 and 127

Moses (1 psalm): 90

Ethan the Ezrahite (1 psalm): 89

Anonymous (the 47 remaining psalms)

Scholars also note that the psalms attributed to David may have originated or been associated with David but may have also included assistance from others. In total, at least eight authors are named, and other anonymous writers certainly would add to this total.

Interestingly, the Psalms were written over nearly a 1,000-year period ranging from the lifetime of Moses in the wilderness (1440—1400 BC) to Ezra (fourth century BC). Most psalms were composed during the lifetimes of David and Solomon.

The ancient nature of the psalm titles has often been questioned. Some have argued that the titles were added much later and should not be considered authentic. However, with the discovery of the Dead Sea Scrolls in the twentieth century, copies of the Psalms from the first century have been found with the traditional author names included. The evidence points to the authentic nature of the traditional authorship of the Psalms.

Still today, Jews and Christians enjoy the Psalms, and many modern songs are based on them. The enduring work of these many songwriters continues to change lives and encourage us to worship God.

Reference URL : https://www.gotquestions.org/Psalms-authors.html

WordPress Lightbox