Home Psalms 20, 21

Psalms 20, 21

06 Feb 2017

Psalms 20, 21 Download PDF

சங்கீதம் 20

1. ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
2. அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

விளக்கவுரை:

சீயோன் மலை சாலோமின் இராஜாவாகிய மெல்கிசதேக்கின் நகரமாகும். இந்த சீயோன் உயரமான (2550 அடி), எருசலேமைச் சுற்றியுள்ள மலைகளுள் ஒன்றாகும். இது யூதர்களுடைய மிக முக்கியமான, எருசலேமின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மலையாகும். எருசலேம், சீயோனிலிருந்து 2.8 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது.
தாவீது எபூசியரை வென்று, அங்கே (சீயோன்) அரண்களையுடைய (சுற்றுச் சுவர்) ஒரு அரண்மனையைக் கட்டினார். (யோசுவா 15 : 63 ; 2 சாமுவேல் 5:7) இது “தாவீதின் நகரம்” என்றும் அழைக்கப்படுகின்றது. (1 இராஜாக்கள் 8 : 1 ; 2 இராஜாக்கள் 19 : 21, 31 ; 1 நாளாகமம் 11 : 5) பழைய ஏற்பாட்டில், சீயோனை “எருசலேம்” என்றும் (சங்கீதம் 87 : 2 ; 149 : 2 ; ஏசாயா 33 : 14 ; யோவேல் 2 : 1) “கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ராயேல்” என்றும் சொல்லப்படுகின்றது. (சங்கீதம் 51 : 18 ; 87 : 5)
உண்மையில் இரண்டு எருசலேம் உள்ளது. ஒன்று மேலே உள்ள சீயோன் மலையிலும், மற்றொன்று அதற்கு அருகில் கீழே உள்ள மோரியா மலையிலும் உள்ளது.

கீழே உள்ள மோரியா மலையிலுள்ள எருசலேம், பரிசேயர் மற்றும் சதுசேயர்களுடைய குருக்கள் வாழும் இடமாகவும், அங்கே உள்ள கோவில், தேவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்கள் வாழுமிடமாகவும் இருக்கின்றது. மேலே உள்ள எருசலேம் (சீயோன் மலை), இயேசுவிற்க்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்கள் வாழுகின்ற இடமாகும். (வெளிப்படுத்தின விசேஷம் 14:1; எபிரெயர் 12: 22-24)
தாவீது, ஓபேத் ஏதேமின் வீட்டிலிருந்து உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து, தாவீதின் நகரத்தில் வைத்தார். (2 சாமுவேல் 5:1, 2; 2 சாமுவேல் 5:9; 1 நாளாகமம் 11:5)

எகிப்திலிருந்து யூதர்கள், மோயீசன் தலைமையில், பாரவோன் மன்னனின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறி, 480 ஆண்டுகளுக்குப் பின்னர், தாவீதின் மகன் சாலமன், கி.மு. 966 ல், மோரியா மலையில் (1 இராஜாக்கள் 6:1-38) மிக அழகான, உயரமானக் (207 அடி) கோவிலைக் கட்டி, அங்கே இந்த உடன்படிக்கைப் பேழையை கொண்டு சென்றார். இந்த, யூதர்களின் முதல் கோவில், சுமார் நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பாபிலோனிய மன்னன் இரண்டாம் நேபுகாத்நேசரால் கி.மு. 587 ல் அழிக்கப்பட்டது. யூதர்கள் பாவம் செய்ததால், எல்லாம் வல்ல இறைவன் அவர்களைப் புறவின மன்னரிடம் ஒப்புக்கொடுத்தார்.

அதன்பிறகு, பெர்சியாவின் அரசனாகிய கோரேஸ், அந்த இடத்தைப் பாபிலோனியரிடமிருந்து வென்று (சுமார் கிமு 536), எரேமியாவின் தீர்க்கதரிசனத்தின்படியே (எரேமியா 29 : 10) எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கே இரண்டாம் கோவிலைக் கட்டும் உரிமையை யூதர்களுக்குக் கொடுத்தார். இந்த இரண்டாம் கோவிலுக்கு செருபாபேல் அடிக்கல் நாட்டினார். (எஸ்ரா 3: 1-4) அதன்பின், 420 ஆண்டுகளுக்குப் பிறகு, ரோமானிய மன்னனால் கி.பி. 70ல் இது அழிக்கப்பட்டது. இடைப்பட்ட இந்த 420 ஆண்டுகளில், அதிகமான காலம் வெளிநாட்டவர்களாகிய பெர்சியர்களாலும், கிரேக்க நாட்டைச் சார்ந்த மாவீரன் அலெக்ஸாண்டராலும் ஆழப்பட்டது. பின்பு மத்தாத்தியா (யூதகுரு) இதை, கிமு 147 ல் வென்று, யூத அரசை நிறுவினார். இது 80 ஆண்டுகளே நீடித்தது.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர்கள், சீயோன் மலையின்பக்கம் போகவே நடு நடுங்கினார்கள். இயேசு கிறிஸ்து வந்தபின், இது புதிய மலையாக, ஆவியின் மலையாக மாறி விட்டது. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களை இப்போதும், எப்போதும், சீயோன் மலையில் ஏறவும், அதன் மகிமையைக்காணவும் இயேசு நம்மை அழைக்கின்றார்.

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரேயர் 4:16)
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்…. (எபிரேயர் 10:19-20)
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (யாக்கோப்பு 4:8)

  

உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள். (ஏசாயா 60:14)

கடவுளின் மக்களை ஒடுக்கினவர்கள், அவர்களுடைய (கடவுளின் மக்களுடைய) காலடிகளைப் பணிவார்கள்.

3. நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக.
4. அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
6. கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை (எண்ணெய்பூசி) இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.

விளக்கவுரை:

ஒருவன் ஞானஸ்தானம் பெரும் பொழுது, எண்ணையால் பூசப்படுகின்றான். இருப்பினும், ஒருவன் பரலோக இராஜ்யத்தைப் பெறவேண்டும் என்றால், கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே முடியும்.

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)

7. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

விளக்கவுரை:

எல்லாம் வல்ல இறைவன் மீது, நாம் எப்பொழுதும் விசுவாசமாக இருக்கவேண்டும்.

8. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
9. கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.

சங்கீதம் 21

1. கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!

விளக்கவுரை:

உங்களுடைய இரட்சிப்பில் மட்டுமே சந்தோஷப்படுங்கள். உங்களுடைய வாழ்க்கையைப் பரலோக இராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளும் படியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆகவே, அனைவரும் கட்டாயமாக ஊழியம் செய்யவேண்டும். மக்களை பாவவழிகளிலிருந்து விளக்கி, பரிசுத்த வாழ்க்கை வாழ கற்றுக்கொடுக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.

2. அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்.
3. உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
4. அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
5. உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.

விளக்கவுரை:

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு 6:33, 34)

6. அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
7. ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
8. உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
9. உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.
10. அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.
11. அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று.
12. அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.
13. கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.

English Version

Psalms 20

1. The Lord hear thee in the day of trouble; the name of the God of Jacob defend thee;
2. Send thee help from the sanctuary, and strengthen thee out of Zion;

Commentary:

The city of Salem which is in mount Zion was ruled by King Melchizedec who received tithe from Abraham. There are two Jerusalems. The above is called Mount Zion and the Jerusalem that is below is called Mount Moriah.
Zion is one of the eminences on which Jerusalem was built. It was surrounded on all sides, except the north, by deep valleys. It was the south-eastern hill of Jerusalem. David won it from the Jebusites (Joshua 15:63; 2 Samuel 5:7) and he built on it a citadel and a palace, and it became “the city of David” (1 Kings 8:1; 2 Kings 19:21, 31; 1 Chronicles 11:5). In Old Testament this Zion was sometimes used (Psalms 87:2; 149:2; Isaiah 33:14; Joel 2:1) to denote Jerusalem in general, and sometimes God’s chosen Israel. (Psalms 51:18; 87:5)

King Solomon ruled Jerusalem from 970 to 930 BC, then he constructed the temple in 966 BC. Solomon then moved the Ark, from city of David to Mount Moriah. (The height of the temple was around 200 feet). (First Kings Chapters7 and 8) The first temple was destroyed by the Babylonians around 587 BC.

Around 530 BC, the second temple was completed on the same site. The second temple spanned 420 years and it was destroyed by the Romans in AD 70. For much of this period, Jerusalem was under foreign domination. During this 420 years Jerusalem was ruled by Persians, Greeks and by the Hasmonean. But the Hasmoneans (Jews – Maccabees) did not rule for long time.

In the New Testament ‘ZION’ is used sometimes to denote the “Church of God” (Hebrews 12:22), and sometimes the “heavenly city”. (Revelation 14:1).

The Israelites of old trembled at the foot of Mount Sinai. They were afraid; but now we have come to a new mountain; spiritual Mount Zion. The Lord invites us to come and ascend the mountain and experience the glories there, both in this life and the next.

Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need. (Hebrews 4:16)
Having therefore, brethren, boldness to enter into the holiest by the blood of Jesus,
By a new and living way, which he hath consecrated for us, through the veil, that is to say, his flesh; (Hebrews 10:19-20)
Draw nigh to God, and he will draw nigh to you. Cleanse your hands, ye sinners; and purify your hearts, ye double minded. (James 4:8)

The sons also of them that afflicted thee shall come bending unto thee; and all they that despised thee shall bow themselves down at the soles of thy feet; and they shall call thee, the city of the Lord, The Zion of the Holy One of Israel. (Isaiah 60:14)

3. Remember all thy offerings, and accept thy burnt sacrifice; Selah.
4. Grant thee according to thine own heart, and fulfil all thy counsel.
5. We will rejoice in thy salvation, and in the name of our God we will set up our banners: the Lord fulfil all thy petitions.
6. Now know I that the Lord saveth his anointed; (smear or rub with oil) he will hear him from his holy heaven with the saving strength of his right hand.

Commentary:

When a Christian is baptized, the person will be smeared by oil. However he will get salvation if and if only he follows the commandments of God.

But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin.
(1 John 7:1)

7. Some trust in chariots, and some in horses: but we will remember the name of the Lord our God.

Commentary:

Have faith in spirit of God which is all powerful.

8. They are brought down and fallen: but we are risen, and stand upright.
9. Save, Lord: let the king hear us when we call.

Psalms 21

1. The king shall joy in thy strength, O Lord; and in thy salvation how greatly shall he rejoice!

Commentary:

Be happy about your salvation only. Spent your life term only to get kingdom of God. So you have to serve God by teaching the values of Christ to your fellow members to achieve salvation. Is it not your duty?

2. Thou hast given him his heart’s desire, and hast not withholden the request of his lips. Selah.
3. For thou preventest him with the blessings of goodness: thou settest a crown of pure gold on his head.
4. He asked life of thee, and thou gavest it him, even length of days for ever and ever.
5. His glory is great in thy salvation: honour and majesty hast thou laid upon him.

Commentary:

But seek ye first the kingdom of God, and his righteousness; and all these things shall be added unto you. Take therefore no thought for the morrow: for the morrow shall take thought for the things of itself. Sufficient unto the day is the evil thereof. (Matthew 6:33, 34)

6. For thou hast made him most blessed for ever: thou hast made him exceeding glad with thy cou
ntenance.
7. For the king trusteth in the Lord, and through the mercy of the most High he shall not be moved.
8. Thine hand shall find out all thine enemies: thy right hand shall find out those that hate thee.
9. Thou shalt make them as a fiery oven in the time of thine anger: the Lord shall swallow them up in his wrath, and the fire shall devour them.
10. Their fruit shalt thou destroy from the earth, and their seed from among the children of men.
11. For they intended evil against thee: they imagined a mischievous device, which they are not able to perform.
12. Therefore shalt thou make them turn their back, when thou shalt make ready thine arrows upon thy strings against the face of them.
13. Be thou exalted, Lord, in thine own strength: so will we sing and praise thy power.

WordPress Lightbox