Spirit of fear of the Lord Download PDF
முந்தையப்பதிவு, அறிவை அருளும் ஆவி அதனுடைய தொடர்ச்சி, கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்தை அருளும் ஆவி.
6. கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்தை அருளும் ஆவி (அச்சம், பயம், மதிப்புக்கொள், பயபக்திக் காட்டு, அஞ்சி நட, ஆழ்ந்த மதிப்பு, வணங்குதல், பயப்படு. மரியாதை, வணக்கத்துக்குரிய.)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். (சங்கீதம் 111:10)
இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,
நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். (உபாகமம் 10:12-13)
தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். (சங்கீதம் 111:5)
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். (சங்கீதம் 112:1, 2)
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். (சங்கீதம் 115:11, 13)
அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.
ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். (நீதிமொழிகள் 1:29-31)
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். (நீதிமொழிகள் 10:27)
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். (நீதிமொழிகள் 14:26, 27)
…..கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். (நீதிமொழிகள் 16:6)
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். (நீதிமொழிகள் 22:4)
சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். (நீதிமொழிகள் 31:30)
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். (நீதிமொழிகள் 8:13)
……என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா 1:14)
நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
மோசே அந்தத் தரிசனத்தைக்கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:
நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான். (அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:30-32)
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. (அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:31)
அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். (அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34, 35)
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார். (2 சாமுவேல் 23:3)
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார்.
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள். (சங்கீதம் 52:5-7)
கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள் தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். (1 நாளாகமாம் 16:25, 26)
பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,
மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான். (வெளிப்படுத்தின விசேஷம் 14:6, 7)
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 15:4)
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது. (வெளிப்படுத்தின விசேஷம் 19:5)
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். (நீதிமொழிகள் 2:1-5)
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி 12:13)
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். (சங்கீதம் 128:5)
குறிப்பு: அடுத்தப் பதிவு,
7. கர்த்தருடைய ஆவியானவர்
6. Spirit of fear of the Lord (be afraid of, be fearful of, be scared of, reverence, venerate, respect.)
The fear of the Lord is the beginning of wisdom; all who follow his precepts have good understanding. To him belongs eternal praise.
(Psalms 111:10)
And now, O Israel, what does the Lord your God ask of you but to fear the Lord your God, to walk in all his ways, to love him, to serve the Lord your God with all your heart and with all your soul, and to observe the Lord’s commands and decrees that I am giving you today for your own good?
(Deuteronomy 10:12-13)
He provides food for those who fear him; he remembers his covenant forever.
(Psalms 111:5)
Praise the Lord. Blessed is the man who fears the Lord, who finds great delight in his commands. His children will be mighty in the land; the generation of the upright will be blessed.
(Psalms 112:1-2)
You who fear him, trust in the Lord: he is their help and shield.
He will bless those who fear the Lord: small and great alike.
(Psalms 115:11, 13)
Since they hated knowledge and did not choose to fear the Lord, since they would not accept my advice and spurned my rebuke, they will eat
the fruit of their ways and be filled with the fruit of their schemes.
(Proverb 1:29-31)
The fear of the Lord adds length to life, but the years of the wicked are cut short. (Proverb 10:27)
He who fears the Lord has a secure fortress, and for his children it will be a refuge. The fear of the Lord is a fountain of life, turning a man from the snares of death. (Proverb 14:26, 27)
…..by the fear of the Lord men depart from evil. (Proverb 16:6)
Humility and the fear of the Lord bring wealth and honor and life. (Proverb 22:4)
Charm is deceptive, and beauty is fleeting; but a woman who fears the Lord is to be praised. (Proverb 31:30)
The fear of the Lord is to hate evil: pride, and arrogance, and the evil way, and the forward mouth, do I hate. (Proverb 8:13)
…..For I am a great king,” says the Lord Almighty, “and my name is to be feared among the nations. (Malachi 1:14)
After forty years had passed, an angel appeared to Moses in the flames of a burning bush in the desert near Mount Sinai. When he saw this, he was amazed at the sight. As he went over to look more closely, he heard the Lord’s voice: ‘I am the God of your fathers, the God of Abraham, Isaac and Jacob.’ Moses trembled with fear and did not dare to look.
(Acts 7:30-32)
Then the church throughout Judea, Galilee and Samaria enjoyed a time of peace. It was strengthened; and encouraged by the Holy Spirit, it grew in numbers, living in the fear of the Lord. (Acts 9:31)
Then Peter began to speak: “I now realize how true it is that God does not show favoritism but accepts men from every nation who fear him and do what is right. (Acts 10:34, 35)
The God of Israel spoke, the Rock of Israel said to me: ‘When one rules over men in righteousness, when he rules in the fear of God, (2 Samuel 23:3)
Surely God will bring you down to everlasting ruin: He will snatch you up and tear you from your tent; he will uproot you from the land of the living.
The righteous will see and fear; they will laugh at him, saying, “Here now is the man who did not make God his stronghold but trusted in his great wealth and grew strong by destroying others!” (Psalms 52:5-7)
For great is the Lord and most worthy of praise; he is to be feared above all gods.
For all the gods of the nations are idols, but the Lord made the heavens.
(1 Chronicles 16:25, 26)
Then I saw another angel flying in midair, and he had the eternal gospel to proclaim to those who live on the earth: to every nation, tribe, language and people.
He said in a loud voice, “Fear God and give him glory, because the hour of his judgment has come. Worship him who made the heavens, the earth, the sea and the springs of water.”
(Revelation 14:6, 7)
Who will not fear you, O Lord, and bring glory to your name? For you alone are holy. All nations will come and worship before you, for your righteous acts have been revealed.
(Revelation 15:4)
Then a voice came from the throne, saying: “Praise our God, all you his servants, you who fear him, both small and great!” (Revelation 19:5)
My son, if thou wilt receive my words, and hide my commandments with thee;
So that thou incline thine ear unto wisdom, and apply thine heart to understanding;
Yea, if thou criest after knowledge, and liftest up thy voice for understanding;
If thou seekest her as silver, and searchest for her as for hid treasures;
Then shalt thou understand the fear of the Lord, and find the knowledge of God. (Proverb 2:1-5)
Now all has been heard; here is the conclusion of the matter: Fear God and keep his commandments, for this is the whole duty of man.
(Ecclesiastes 12:13)
The Lord shall bless thee out of Zion: and thou shalt see the good of Jerusalem all the days of thy life. (Psalms 128:5)
Note: Next Topic is,
7. Spirit of the Lord.