Spirit of Knowledge Download PDF
அறிவை அருளும் ஆவி. முந்தையப்பதிவு, பெலனை அருளும் ஆவி அதனுடைய தொடர்ச்சி, அறிவை அருளும் ஆவி.
5. அறிவை அருளும் ஆவி
(புத்தி, போதகம், அறிவு, போதித்தல், விவேகம், நிபுணத்துவம். அறிவை அல்லது புத்தியை அல்லது ஒரு கோட்பாட்டை அல்லது ஒரு விஷயத்தை பற்றிய அனுபவம். பொதுவாக மக்களிடையே கிடைக்கும் தகவல் அல்லது கல்வி அல்லது போதனை மூலம் பெற்றுக்கொள்வது.)
பரிசுத்த அவியைப் பற்றிய அறிவு என்பது, கடவுளைப் பற்றியும், அவருடைய வழிகளைப் பற்றியும் அறிந்துகொள்ள பயன்படுகின்றது. கடவுளோடு நெருங்கிய தொடர்புள்ளவர்களுக்கு மட்டுமே, இத்தகைய பரிசுத்த ஆவியின் அறிவு கொடுக்கப்படுகின்றது. ஆழமான வேத வாசிப்பு, வேத வாக்கியங்களின் தொகுப்பு, நீண்டகால சமய சொற்பொழிவு மற்றும் பேய்விரட்டுதல் போன்றவற்றிலுள்ள அனுபவ அறிவின் மூலமாகவும், கடவுளைப்பற்றியும், சாத்தானுடைய மந்திர தந்திரங்களைப் பற்றியும் ஆழ்ந்து அறிந்து, அதற்கு ஏற்ப செயல்பட்டு, கடவுளுடைய வார்த்தையின் உதவியோடு, சாத்தானை வெல்ல உதவுகின்றது.
வெகுநாட்களாகப் பயன்படுத்திய ஒரு (பழைய) வாகனத்தை, வாங்க வேண்டும் என்றால், பொதுவாக ஒரு நல்ல இயந்திர வல்லுநரிடம் ஆலோசனை கேட்போம். ஏனென்றால், அந்த இயந்திர வல்லுநர், இயந்திரம் ஓடும் பொழுதே, தன்னுடைய நீண்டகால அனுபவத்தின் மூலமாக, இயந்திரத்திலிருந்து வரும் சத்தத்தைக் கொண்டே, அந்த இயந்திரம் சிறப்பாக இயங்குகிறதா இல்லையா என்று கண்டுபிடித்துவிடுவார்.
இதைப்போலவே, நம்முடைய வாழ்விலும், முக்கிய முடிவுகளை எடுக்கும்பொழுதும், நன்மை தீமைகளைப் பிரித்தெடுக்கவும், பேய்களை விரட்டவும், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும், பரிசுத்த ஆவியைப் பற்றிய அறிவு மிக அதிகமாகவேத் தேவைப்படுகிறது.
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள். (எரேமியா 4:22)
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். (நிதிமொழிகள் 2:6)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். (நிதிமொழிகள் 1:7)
வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல; (நிதிமொழிகள் 18:5)
புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும். (நிதிமொழிகள் 15:14)
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி……. (நிதிமொழிகள் 2:1-2)
உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன். (சங்கீதம் 119:66)
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம். (நிதிமொழிகள் 20:15)
புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும். (நிதிமொழிகள் 18:15)
புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும். (நிதிமொழிகள் 15:14)
அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். (நிதிமொழிகள் 1:29)
ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை. (பிரசங்கி 7:12)
மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். (பிரசங்கி 12:9)
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். (ஏசாயா 11:9)
ஜாதிகளினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். (ஏசாயா 45:20)
அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத்தெரியக்காட்டினீர். (எரேமியா 11:18)
நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர். (ஏசாயா 44:25)
இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக் குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. (ஓசியா 4:1)
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். (ரோமர் 1:28)
நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்ப விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். (1 கொரிந்தியர் 15:34-38)
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும் அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; (1 கொரிந்தியர் 15:42)
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (2 கொரிந்தியர் 2:14)
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. (கொலோசெயர் 2:3)
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். (1 தீமோத்தேயு 2:4)
தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. (2 பேதுரு 1:2)
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். (2 பேதுரு 3:18)
ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன். (மல்கியா 2:7)
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். (நீதிமொழிகள் 4:5-10)
என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்; (நீதிமொழிகள் 5:1)
இச்சக வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக. (நீதிமொழிகள் 7: 4-5)
புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.
நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.
பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது. (நீதிமொழிகள் 9:4-6)
புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். (நீதிமொழிகள் 15:32)
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! (நீதிமொழிகள் 16:16)
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. (ஏசாயா 40:28)
நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். (1 யோவான் 5:19, 20)
குறிப்பு: அடுத்தப்பதிவு,
4. கர்த்தருக்கு பயப்படும் பயத்தை அருளும் ஆவி.
5. Spirit of Knowledge (Knowledge: facts, information, expertise and skills acquired through experience or education; the theoretical or practical understanding of a subject)
The Spirit of Knowledge is continuation of the previous topic Spirit of Might.
The Holy Spirit’s gift of knowledge makes us know the Lord and His will. Only those who have a very close relationship with Spirit of God will receive this knowledge. It is necessary to read the Bible in the way it was meant to be read, understood, and lived out. Thorough understanding of the Bible, many years of dedicated service to God and experiences in casting out demons help to understand the will of God and to take a stand against the devil’s schemes and overcome Satan with the word of God.
If a person is interested to get a used car, he will take a mechanic to study the car, because he had better knowledge about the car. Since the mechanic deals with many cars he may be able to judge the condition of a car by merely listening to the engine noise. He acquired this skill through experience or education; the theoretical or practical understanding of car engine.
Likewise, in our daily life, we need Spiritual knowledge to make important decisions, to distinguish between good and evil, to cast out demons and to be blessed.
For my people is foolish, they have not known me; they are sottish (foolish) children, and they have none understanding: they are wise to do evil, but to do good they have no knowledge. (Jeremiah 4:22)
For the Lord gives wisdom; from his mouth come knowledge and understanding. (Proverbs 2:6)
The fear of the Lord is the beginning of knowledge: but fools despise wisdom and instruction. (Proverbs 1:7)
It is not good to accept the person of the wicked, to overthrow the righteous in judgment. (Proverbs 18:5)
The discerning heart seeks knowledge, but the mouth of a fool feeds on folly. (Proverbs 15:14)
My son, if thou wilt receive my words, and hide my commandments with thee;
So that thou incline thine ear unto wisdom, and apply thine heart to understanding………. (Proverbs 2:1-2)
Teach me knowledge and good judgment, for I trust your commands. (Psalm 119:66)
There is gold, and a multitude of rubies: but the lips of knowledge are a precious jewel. (Proverbs 20:15)
The heart of the prudent getteth knowledge; and the ear of the wise seeketh knowledge. (Proverbs 18:15)
The heart of him that hath understanding seeketh knowledge: but the mouth of fools feedeth on foolishness. (Proverbs 15:14)
For that they hated knowledge, and did not choose the fear of the Lord. (Proverbs 1:29)
For wisdom is a defence, and money is a defence: but the excellency of knowledge is, that wisdom giveth life to them that have it. (Ecclesiastes 7:12)
And moreover, because the preacher was wise, he still taught the people knowledge; yea, he gave good heed, and sought out, and set in order many proverbs. (Ecclesiastes 12:9)
They shall not hurt nor destroy in all my holy mountain: for the earth shall be full of the knowledge of the Lord, as the waters cover the sea. (Isaiah 11:9)
Assemble yourselves and come; draw near together, ye that are escaped of the nations: they have no knowledge that set up the wood of their graven image, and pray unto a god that cannot save. (Isaiah 45:20)
And the Lord hath given me knowledge of it, and I know it: then thou shewedst me their doings. (Jeremiah 11:18)
That frustrateth the tokens of the liars, and maketh diviners mad; that turneth wise men backward, and maketh their knowledge foolish;
(Isaiah 44:25)
Hear the word of the Lord, ye children of Israel: for the Lord hath a controversy with the inhabitants of the land, because there is no truth, nor mercy, nor knowledge of God in the land. (Hosea 4:1)
And even as they did not like to retain God in their knowledge, God gave them over to a reprobate mind, to do those things which are not convenient. (Romans 1:28)
Awake to righteousness, and sin not; for some have not the knowledge of God: I speak this to your shame.
But some man will say, How are the dead raised up? and with what body do they come?
Thou fool, that which thou sowest is not quickened, except it die.
And that which thou sowest, thou sowest not that body that shall be, but bare grain, it may chance of wheat, or of some other grain:
But God giveth it a body as it hath pleased him, and to every seed his own body. (1 Corinthians 15:34-38)
So also is the resurrection of the dead. It is sown in corruption; it is raised in incorruption: (1 Corinthians 15:42)
Now thanks be unto God, which always causeth us to triumph in Christ, and maketh manifest the savour of his knowledge by us in every place. (2 Corinthians 2:14)
In whom are hid all the treasures of wisdom and knowledge (Colossians 2:3)
Who will have all men to be saved, and to come unto the knowledge of the truth. (1 Timothy 2:4)
Grace and peace be multiplied unto you through the knowledge of God, and of Jesus our Lord. (2 Peter 1:2)
But grow in grace, and in the knowledge of our Lord and Saviour Jesus Christ. To him be glory both now and for ever. Amen. (2 Peter 3:18)
For the priest’s lips should keep knowledge, and they should seek the law at his mouth: for he is the messenger of the Lord of hosts. (Malachi 2:7)
Get wisdom, get understanding: forget it not; neither decline from the words of my mouth.
Forsake her not, and she shall preserve thee: love her, and she shall keep thee.
Wisdom is the principal thing; therefore get wisdom: and with all thy getting get understanding.
Exalt her, and she shall promote thee: she shall bring thee to honour, when thou dost embrace her.
She shall give to thine head an ornament of grace: a crown of glory shall she deliver to thee.
Hear, O my son, and receive my sayings; and the years of thy life shall be many. (Proverbs 4:5-10)
My son, attend unto my wisdom, and bow thine ear to my understanding. (Proverbs 5:1)
Say unto wisdom, Thou art my sister; and call understanding thy kinswoman:
That they may keep thee from the strange woman, from the stranger which flattereth with her words. (Proverbs 7:4-5)
Whoso is simple, let him turn in hither: as for him that wanteth understanding, she saith to him,
Come, eat of my bread, and drink of the wine which I have mingled.
Forsake the foolish, and live; and go in the way of understanding. (Proverbs 9:4-6)
He that refuseth instruction despiseth his own soul: but he that heareth reproof getteth understanding. (Proverbs 15:32)
How much better is it to get wisdom than gold! and to get understanding rather to be chosen than silver! (Proverbs 16:16)
Hast thou not known? hast thou not heard, that the everlasting God, the Lord, the Creator of the ends of the earth, fainteth not, neither is weary? there is no searching of his understanding. (Isaiah 40:28)
And we know that we are of God, and the whole world lieth in wickedness.
And we know that the Son of God is come, and hath given us an understanding, that we may know him that is true, and we are in him that is true, even in his Son Jesus Christ. This is the true God, and eternal life. (1 John 5:19, 20)
Note: Next Topic is,
6. Spirit of Fear of the Lord