Hail, Holy Queen, Mother of Mercy, our life Download PDF
அருள் நிறைந்த மரியாயே வாழ்க!
அருள் நிறைந்த மரியாயே வாழ்க, கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியேஸ்ட மரியாயே சருவேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
(3 முறை சொல்லுக)
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது உம்மையே நோக்கிப் பெருமுச்சி விடுகின்றோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே! இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தகங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக, சுர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
செபிப்போமாக:
எங்கள் அடைக்கலமும் பலமும்மாகிய சர்வேசுரா! உம்மை நோக்கி கூப்பிடுகிற மக்களை கிருபையாய் கண்ணோக்கியருளும். அன்றியும் மகத்துவம் பொருந்திய அமலோற்ப்பவ கன்னியும,; தேவதாயருமாகிய அர்ச். மரியாளையும் மற்றும் பரலோகத்தில் ஆண்டவரோடு இருக்ககூடிய சகல புனிதர்களுடைய மன்றாட்டுக்களுக்கும், தேவரீர் மனமிரங்கி பாவிகள் மனம்திரும்புவற்க்காகவும், நமது தாயாகிய திருச்சபை சுயாதீனம் பெற்று தழைத்து ஓங்குவதற்க்காவும், நாங்கள் செய்து வருகின்ற செபங்களை கிருபைதயாபத்தோடே கேட்டருளும் சுவாமி. இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய ஏசுகிறீஸ்து நாதருடைய திருமுகத்தை பார்த்து எங்களுக்கு தந்தருளும் சுவாமி. ஆமென்.
அதிதூதரான புனித மிக்கேலே, யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும். பசாசின் பட்டணத்திலும், கண்ணிகளிலும் நின்று எங்களை காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுலகசேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீர் ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுத்தித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தெய்வ வல்லமையைக் கொண்டு நரகபாதாளத்திலே தள்ளிவிடும். ஆமென்.
இயேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே – எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
இயேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே – எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
இயேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே – எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
Hail, Holy Queen, Mother of Mercy, our life
Holy Mary, Mother of God, pray for us sinners, now and at the hour of our death. Amen.
(Say 3 times)
Hail, Holy Queen, Mother of Mercy, our life, our sweetness, and our hope. To thee to we cry, poor banished children of Eve. To thee do we send up our sighs, mourning and weeping in this valley of tears. Turn then, most gracious advocate, thine eyes of mercy toward us, and after this exile, show unto us the blessed Fruit of thy womb, Jesus. O clement, O loving, O sweet Virgin Mary.
Pray for us, O holy Mother of God. That we may be made worthy of the promises of Christ.
Let us pray:
O God, our refuge and our strength, look down with mercy upon the people who cry to Thee; and by the intercession of the glorious and immaculate Virgin Mary, Mother of God and all the holy saints, in Thy mercy and goodness hear our prayers for the conversion of sinners, and for the liberty and exaltation of the Holy Mother the Church. Through the same Christ Our Lord. Amen.
Saint Michael the Archangel, defend us in battle; be our protection against the wickedness and snares of the devil. May God rebuke him, we humbly pray: and do thou, O Prince of the heavenly host, by the power of God, thrust into hell satan and all the evil spirits who prowl about the world seeking the ruin of souls. Amen.
Most Sacred Heart of Jesus, Have mercy on us.
Most Sacred Heart of Jesus, Have mercy on us.
Most Sacred Heart of Jesus, Have mercy on us.